லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.
வாட்ஸ் இலக்கங்கள் :- 070386754, 071960810
மின்னஞ்சல் முகவரி :- slemb.beirut@mfa.gov.lk
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடாத்திய நிலையில், இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நடாத்தியது.
இதில் லெபனானின் தெற்கு பகுதி மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.
இரு நாட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையிலேயே, லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள இலங்கையர்களிடம் அந்த நாட்டு இலங்கை தூதரகம் தகவல்களை கோரியுள்ளது. (TrueCeylon)