அவுஸ்திரேலிய அணியுடனான ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் டே வன் கொன்வே போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே, அவர் இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டே வன் கொன்வேயின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை X-RAY பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அணி அறிவித்துள்ளது.
இதன்படி, கொன்வே 5 முதல் 6 வாரங்கள் விளையாட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய அணியுடனான அடுத்த தொடரிலும் கொன்வேக்கு விளையாட முடியாத நிலைமை ஏற்படும் என அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அணியின் முக்கிய வீரரான டே வன் கொன்வே, இறுதிப் போட்டியில் விளையாடாதமை, தமது அணிக்கு பாரிய பாதிப்பு என அணியின் பயிற்றுவிப்பாளர் கூறியுள்ளார்.