இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரமேஷ்வரனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கோய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், ரமேஷ்வரனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரனுடன் நெருங்கி பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post