இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத கறுவா சிகரட்டை அறிமுகப்படுத்தி அமைச்சர் விமல் வீரவங்ச இலங்கை புகையிலை நிறுவனம் மற்றும் சிலோன் டுபேகோ நிறுவனங்களுடன் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் உற்பத்தித் துறையில் ஆயுர்வேத கறுவா சிகரட்டுகள் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகிறார்.
கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (17) இந்த ஆயுர்வேத சிகரட் பிரச்சாரத்தை முன்னெடுத்த போது அவர் இதை கூறினார்.
100% இலங்கை கறுவாப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் Lion Heart என பெயரிடப்பட்ட இந்த சிகரட்டை கண்டுபிடித்தவர் சமன்ன புஞ்சிகேவா
நாட்டின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட் புகைத்தலுக்கு அடிமையாகும் ஒருவருக்கு மாற்றீடாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.(TheLeader)
Discussion about this post