எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டு காலப் பகுதிக்குள், தற்காலிகத்திற்கேனும் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post