இலங்கை முழுவதும் பரவியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாட்டை முடக்குவதா என்பது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் நாட்டை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ முடக்குவதற்கான யோசனை முன்வைக்கப்படலாம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை முடக்குவது குறித்து அமைச்சரவை தீர்மானத்திற்கு அமையவே, எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது. (Thamilan)
Discussion about this post