இரண்டாம் இணைப்பு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று (12) இடம்பெற்ற சந்திப்பு நாளை (13) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post