தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்ற இந்த நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் வருகைத் தந்து, வாக்களித்துள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே விஜய் சைக்கிளில் வருகைத் தந்து வாக்களித்ததாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சைக்கிளில் வருகைத் தரும் போது, அவரை பெருந்திரளான ரசிகர்கள், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளனர்.
வாக்குசாவடியிலும் பெருமளவிலானோர் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பை மறைமுகமாக வெளிகொணரும் வகையிலேயே விஜய், சைக்கிளில் வருகைத் தந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (TrueCeylon)
Discussion about this post