கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, மிக வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, அலரிமாளிகையில் நேற்றைய தினம் அதன் பிரதானி பஷில் ராஜபக்ஸ தலைமையில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து இதன்போது அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, தற்போது நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களை முடக்கி, தடைகள் இன்றி நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (Hiru News)
Discussion about this post