நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 3900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிக்கு 10,000 ரூபா தண்டபணம் அறவிடப்படுவதுடன், 6 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
Discussion about this post