கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவிசாவளை – பானகாம பகுதி கடந்த சில மணிநேரமாக நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (04) பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால், பிரதான வீதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post