கொழும்பு முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடற்சார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை கடலுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. (TrurCeylon)
Discussion about this post