இரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என நிபுணர்கள் அறிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
முதலாவது கட்டத்தில் ஒருவகை தடுப்பூசியையும் இரண்டாம் கட்டத்தில் மற்றுமொரு வகையை சேர்ந்த தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என துறைசார் விசேட நிபுணர்கள் அறிவித்துள்ளாக அமைச்சர் இதன்போது கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள வைத்தியர்களும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதனால், முதலாம் கட்டத்தில் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்கள், இரண்டாம் கட்ட தடுப்பூசி தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
Discussion about this post