2021 செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 18 வயதினை பூர்த்தி செய்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனை நோக்காக கொண்டு மேலும் ஒன்பது மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் மற்றும் 14 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி அளவுகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 09 ஆம் திகதி நிலவரப்படி, நாடு 19.49 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
அவற்றுள் 11.26 மில்லியன் முதல் டோஸாகவும், 3.25 மில்லியன் இரண்டாவது டோஸாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 18 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு செப்டம்பரிலிருந்து தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post