ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 2021.08.16 ஆம் திகதி முதல் 2021.09.15 வரையில் குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (Trueceylon)
Discussion about this post