2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பைடன் நிர்வாகம் மீண்டும் நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைக்கான நேரம் வரவில்லை என்று கூறி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஈரான் நிராகரித்தது.
அந்த நேரத்தில் அமெரிக்காவுடன் அமர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர், ட்ரம்ப் நிர்வாகம் தனது ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் அல்லது எளிதாக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வந்தது.
டொனால்ட் டிரம்ப், 2018 ல் இருந்து விலகிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மீண்டும் திரும்பும் என்று தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்
எனினும்“ US/E3 நிலைகள் மற்றும் செயல்களைக் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்ட முறைசாரா கூட்டத்திற்கு நேரம் வரவில்லை” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே ட்விட்டரில் தெரிவித்தார்.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை உள்ளடக்கியதை E3 என்று அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post