தலைமன்னார் பகுதியில் பஸ் ஒன்றுடன், ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்றுவதற்கான இரத்த தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்டேன்லி டி மெல் தெரிவிக்கின்றார்.
இதன்படி, குறித்த நோயாளர்களுக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்க இயலுமானோர் முன்வந்து உதவுமாறு அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post