இரண்டாம் இணைப்பு
அதிக மழையுடனான வானிலையை அடுத்து, ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, குழந்தையொன்று உள்ளிட்ட இருவர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி – எல்ல பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே, 17 வயதான யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் மூவர் காணாமல் போயுள்ளனர்.
இரத்தினபுரி − எல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
Discussion about this post