பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
சம்பள நிர்ணய சபை இன்று கூடி விடயங்களை ஆராய்ந்ததை அடுத்தே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
இந்த யோசனை தொடர்பில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட போதிலும், அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
இதையடுத்து, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விடயத்தை சம்பள நிர்ணய சபைக்கு கையளித்திருந்தார்.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத்திட்ட உதவித் தொகையாக 100 ரூபாவுமாக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்திற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும், அந்த தீர்மானத்தை தொழில் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post