ஹட்டன் நகரில் கேள்விக்கு ஏற்ற லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்மையினால், இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் நகருக்கு சுமார் 10 நாட்களின் பின்னர், லிட்ரோ எரிவாயு சிலிண்டர் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்;ய மக்கள், இன்று அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்தனர்.
எனினும், வாடிக்கையாளர்களின் கேள்விக்கு ஏற்ற, எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமையினால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எரிவாயு நிறுவனத்தினால் ஹட்டன் நகருக்கு 75 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டதாகவும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு உரிய வகையில் சிலிண்டர்களை விற்பனை செய்ய முடியவில்லை என எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post