பாராளுமன்ற வளாகத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்த இருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு நுழையும் பாதை வழியாக உள்ள தியவன்னா ஓயாவுக்கு அருகில் நின்று படமெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பாராளுமன்றத்தை படமெடுத்தமைக்கான நோக்கத்தை சந்தேகநபர்கள் இதுவரையில் வெளியிடாத நிலையில், தலங்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(TrueCeylon)