கடந்த 4 தினங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில், 30 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
கடந்த 4 தினங்களில் 65 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 4 தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதத்தில் மாத்திரம் 268 டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 863 டெங்கு நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 1860 டெங்கு நோயாளர்களும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முடிவடைந்த இதுவரையான காலம் வரை 7873 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 2760 பேருக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனவரி மாதம் 496 பேரும், பெப்ரவரி மாதம் 487 பேரும், மார்ச் மாதம் 797 பேரும், ஏப்ரல் மாதம் 725 பேரும், மே மாதம் 247 பேரும், ஜுன் மாதத்தின் இதுவரையான காலம் வரை 9 பேரும் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிடுகின்றது.
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான எலி காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் பரவலுக்கு மத்தியில், டெங்கு மற்றும் எலி காய்ச்சல் ஆகியனவும் சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post