கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளதாக கொழும்பு காசல் தெரு மகளிர் மருத்துவமனை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சனத் லெனரோல் கூறினார்.
இவர்களில் பெரும்பாலான தாய்மார்கள் தடுப்பூசிகள் இரண்டில் ஒன்றையும் பெறவில்லை என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டில் சுமார் 300,000 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்படவில்லை.
தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், ஒரு மாதத்தில் சுமார் 20 கர்ப்பிணி தாய்மார்கள் இறக்க வாய்ப்புள்ளது.
கடுமையான டெல்டா வைரஸ் மாறுபாடு கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலகுவில் தொற்றிக்கொள்வதாகவும் கூறினார்.
இதையடுத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோபார்ம், மொடர்னா மற்றும் ஃபைஸர் தடுப்பூசிகளை கொடுக்க வேண்டும் என்றும், கோவிட் தடுப்பூசி கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எந்த மருத்துவ பரிசோதனையும் காட்டவில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்றும் விளக்கியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்க்கு எந்த நிலையிலும் கோவிட் தடுப்பூசி போட தேசிய தடுப்பூசி குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் ஆண்டுதோறும் 90 கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் இறக்கின்றனர் என்றும் சிறப்பு மருத்துவர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post