குருநாகல் − மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் TV தெரண தொலைக்காட்சியில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தெரண தொலைக்காட்சியில் பணிப்புரியும் ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த வேன், கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வேனின் முன் ஆசனத்தில் பயணித்த தெரண தொலைக்காட்சி உதவி ஒளிபதிவாளரான தருபதி உவிந்து என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Discussion about this post