தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள், ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்தினார்கள்.
நேற்றைய தினம் (16) நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையின் ஊடாக, அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, வீ.ஆனந்தசங்கரி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வீ.ஆனந்தசங்கரி தேகாரோக்கியத்துடன் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)