திருகோணமலை நகரிலுள்ள வங்கியொன்றில் இனவாத அமைப்பொன்றின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த 98 கோடி ரூபா நிதி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்;பிடுகின்றனர்.
திருகோணமலை நகரிலுள்ள வங்கியொன்றில் இனவாத அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு, இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரும், லட்சக்கணக்கான ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாணந்துரை – வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை, பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தான் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை, இந்த வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டுள்ளதாக, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த இனவாத அமைப்பின் வங்கி கணக்கு 2013ம் ஆண்டு முதல் நடத்திச் செல்லப்பட்டுள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்கிற்கு, நிதி கிடைக்கும் விதம் தொடர்பிலான விசாரணைகளை பாதுகாப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவிடம் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post