திருகோணமலை சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இந்த நபர் வைத்திருந்த மோட்டார் குண்டை கிரைண்டர் மெசின் மூலமாக அறைத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோது குண்டு வெடித்துள்ளது.
இதனால் அவர் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தினை உறவினர்களிடம இன்றைய தினம்(20) கயளிக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.
Discussion about this post