ஊரடங்கு சட்டமும், பயணக் கட்டுப்பாடும் ஒப்பீட்டளவில் ஒன்று என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
நபர்கள் அங்கும், இங்கும் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வசனமே சர்வதேச சரத்துக்களில் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்னரும், இலங்கையில் இதனையே நடைமுறைப்படுத்தியிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு முன்னர், இலங்கையில் ஊரடங்கு என்ற வசனம் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
ஊரடங்கு அளவிற்கு பாரதூரம் பயணக் கட்டுப்பாடுகளில் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்குடன் ஒப்பிடும் போது, பயணக் கட்டுப்பாடும், ஊரடங்கும் ஒப்பீட்டு ரீதியில் ஒன்று என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.
இந்த நிலையில, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறிய சுமார் 4000 பேர், தமிழ் சிங்கள புத்ததாண்டுக்கு பின்னரான காலப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
Discussion about this post