நுவரெலியா − வெலிமட பிரதான வீதியின் ஹக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளை − எல்ல பகுதியிலிருந்து நுவரெலியா பயணித்த முச்சக்கரவண்டி, மீண்டும் எல்ல நோக்கி பயணித்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்றுடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 51, 52 மற்றும் 20 வயதான மூன்று பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post