மொறட்டுவை – எகடஉயன பகுதியிலுள்ள பாதசாரி கடவையில் கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி, கருவிலிருந்து சிசு உள்ளிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த கர்ப்பணிதாய், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், சுமார் 4 மாதங்களின் பின்னர், குறித்த பெண், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மதுஷானி மல்காந்தி (25) என்ற பெண், வாழ் முழுவதும் படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.(WANESA TV)
Discussion about this post