ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ , சமல் ராஜபக்ஸ, ஷசிந்திர ராஜபக்ஸ ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானம் எட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல தாம் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.
பதவி காலம் முடியும் வரை தாம் பதவியில் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய ஆட்சியை அமைக்க எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், எதிர்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். (TrueCeylon)