இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (16) அமெரிக்க டொலர் ஒன்றின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 346.33 ரூபாய் ஆகவும் உள்ளது.
இதேவேளை, தங்கத்தின் விலையும் இன்று உயர்வை கண்டுள்ளது.
நேற்றைய தினம் 164,000 ஆக காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று, 166,500 ஆக காணப்படுகின்றது.
டொலரின் விலை ஏற்ற இரக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளமை தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (TrueCeylon)