நாட்டின் மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக தீரவுகான இலங்கை உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்
அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்கு ஏற்புடைய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்றும் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமானது நாட்டுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது எனக் கூறியுள்ள அவர்,
அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் சமூக – பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உபகட்டமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதில் இலங்கை முன்னின்று செயலாற்றிவருகின்றது எனக் கூறியுள்ள அவர், அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்றார்.
அந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இணங்கியிருப்பதுடன், அதற்குரிய சட்டவரைபைத் தயாரிப்பதற்கான அமைச்சரை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு அதன் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.(TrueCeylon)