நாட்டில் முகக்கவச சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அவர் கூறுகின்றார்.
அவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே, அஜித் ரோஹண இதனைக் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post