கண்டி – ஹந்தானையில் நிறுவப்பட்ட நாட்டின் முதலாவது வெளிநாட்டு பறவை பூங்கா மற்றும் சுற்றுலா வலயம் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிற்பகல் 03.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதுடன், 23ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
27 ஏக்கர் வெளிநாட்டு பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.
வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள் உள்ளடங்களாக இந்த பூங்காவில் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளதாக அதன் தலைவர் நிஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த வெளிநாட்டு பறவைகள் பூங்காவில் பெரிய கூண்டுகளில் வெளிநாட்டு பறவைகள் அடைத்து வைக்கப்பட்டு விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஏறக்குறைய 100 பணியாளர்கள் உள்ளனர்.
40 ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளை ஆய்வு செய்து இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.