கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (16) முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நாளாந்தம் 6 மணித்தியாலங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையான 6 மணித்தியால ஊரடங்கு பிறப்பிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த வேறு எந்தவொரு தரப்பிற்கும் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post