கொரோனா தற்காலிய விசேட ஏற்பாடுகள் (2019) சட்டமூலம், திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
சட்டமூலம் மீதான விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு, கொவிட் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த விவாதத்தின் போது, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி யோசனைகளை முன்வைத்திருந்தார்.
கொவிட் பரவலுக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கொவிட் பரவலின் போது இணைய வழியாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், சபையில் தெரிவித்திருந்தார். (TrueCeylon)
Discussion about this post