இலங்கையில் செயற்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, 43 தவ்ஹீத் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய அமைப்புக்களின் பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறான நிலையில், அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தமது பணிகளை முன்னோக்கி கொண்டு செல்ல சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தை எட்டியுள்ளது.
அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதியை செயற்குழு வழங்கியதாக தெரிய வருகின்றது.
இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் இந்த அரசியல் கட்சி அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு செயற்படவுள்ளதாக அந்த அமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)
Discussion about this post