ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.