லண்டனில் கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகைவின் வீட்டிற்கு முன்பாக தமிழ் இளைஞர்கள் சிலர் ஒன்று திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், அந்த நாட்டு பொலிஸாருக்கும், இளைஞர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து அம்பிகை கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், அம்பிகைவின் வீட்டிற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளுடன் ஒன்று கூடிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும், இளைஞர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சில தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
”நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (IBC Tamil)
Discussion about this post