மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் கால எல்லை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள், மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்காக தண்டப் பணம் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post