இரத்தினபுரி – கஹவத்தை – ஓபநாயக்க பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபர், பாடசாலை மாணவர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் சேவை என்பது மிகவும் கௌரவமாக சேவை என கூறியுள்ள அவர், இவ்வாறான ஒரு சிலரின் அநாகரீக நடவடிக்கைகளினால் முழு ஆசிரியர் சமூகத்திற்கும் அது இழுக்கை ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறான செயல்கள் மிகவும் மோசமான செயல் என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், உடனடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சிந்தனைகளை கொண்டவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
தொடர்புடைய செய்தி :- இரத்தினபுரி தமிழ் பாடசாலை அதிபரொருவர் மாணவரொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி − போராட்டத்தில் பெற்றோர்
Discussion about this post