கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 6 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோரின் விபரங்கள்
01.பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
02.சுதுஹ{ம்பொல பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
03.வத்தளை பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர், தனது வீட்டிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
04.பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 96 வயதான பெண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.
05.கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளார்.
06.கிலாவத்துர பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் கடந்த 10ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post