இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன .
அவர்கள் மூவரும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியுள்ள காரணத்தினால் இலங்கை கிரிக்கெட்டால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகால போட்டித் தடை விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சில அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர்களுக்கு ஒரு வருட கால கிரிக்கெட் தடையே விதிக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் அரசாங்கத்தால் எந்த தீர்மானமும் எடுக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்ற சுயாதீனநிறுவனமே அவர்களுக்கான உரிய தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .(trueceylon)
Discussion about this post