ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கத்தோலிக்க மக்களினால் இன்று கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை சரியான நியாயம் கிடைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் இன்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அனைத்து கிறிஸ்தவ மக்களையும் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து, தேவாலயத்திற்கு வருகைத் தருமாறு கர்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அதேபோன்று, இன்றைய திருப்பலி ஒப்புக் கொடுத்தலின் பின்னர், அமைதியான போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post