புர்கா தடையை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
இந்த அமைச்சரவை பத்திரம் பெரும்பாலும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமையினால், இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் தெரிவிக்கின்றது.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சாட் கட்டாக், தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் புர்கா தடை செய்யப்படுமாக இருந்தால், அது இலங்கை முஸ்லிம்களையும், உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களையும் உணர்வு ரீதியாக காயப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் விடயமாகவே இதனை கருத முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post