ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 3 இலங்கையர்கள் இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் 60 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களையும் மற்ற நாட்டவர்களுடன் வெளியேற்றுமாறு இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வெளியுறவு செயலாளர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post