நாட்டில் இவ்வாண்டு 20,000 இளம் தொழில்முனைவோருக்கு காணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இளம் தொழில்முனைவோருக்கு 100,000 நிலங்களை வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக இது முன்னெடுக்கப்படுவதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க தெரிவித்தார்.
இதற்காக நாடு முழுவதும் உள்ள 35,000 இலட்சம் இளம் தொழில்முனைவோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோரின் நேர்காணல்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன, இவை 31 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன..
இந்த காணிகளை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வணிக மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அதன்படி, காணி அலகுகள் விநியோகம் அடுத்த ஜூன் முதல் தொடங்கும் என்றும் கூறினார். (True Ceylon)
Discussion about this post