இலங்கையில் இரண்டாவது கொவிட் அலை ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை 1076 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை பதிவான கொவிட் உயிரிழப்புக்கள் தொடர்பிலான அட்டவணையை கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டது.
இந்த அட்டவணையின் பிரகாரம், 71 வயதுக்கு அதிகமானோரே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, 71 வயதுக்கு மேற்பட்ட 510 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 61 முதல் 70 வயது வரையான 290 பேரும், 51 முதல் 60 வயதான 152 பேரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
41 முதல் 50 வயது வரையான 78 பேரும், 31 முதல் 40 வயது வரையான 30 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 வயதுக்கு இடைப்பட்ட இரு குழந்தைகள் கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post