இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான முதலாவது கர்ப்பணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கர்ப்பணித் தாய் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
ராகமை − பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 11 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது. (NETH NEWS)
Discussion about this post